Sunday, 26 October 2014

காதல் கவிதைகள் 2

காதல் கவிதைகள்



அவளை
காதலிக்கும்
போது
எவளையும்
பிடிக்கவில்லை..!...

ஆனால்...

அவள்  போன
பிறகு
காதலிக்கவே
பிடிக்கவில்லை..!







நீ பேசாவிட்டலும் நான் பேசுகிறேன்
என்று என்னை இழிவாக
நினைக்காதே...!!

என்னால்
உன்னை விட்டு ஒரு துளியேனும்
விலகிச் செல்ல முடியவில்லை...!
உன் மீது கொண்ட அன்பு,அக்கறை,காதல்
தான் காரணம்...!
காதலித்த நாள் முதலாய் உன்னை என்
கைக்குழந்தையாகவே  கண்ட
எனக்கு திடீரென்று நீ
என்னை விட்டு சென்றது போல என்னால்
விலகிட முடியவில்லை...!
என்னை மன்னித்து விடு...!
உனக்கு பிடிக்காத ஒன்றை உன்னிடம்
கேட்கிறேன்.... தயவு செய்து என்
நிலை புரிந்து திரும்பி வா என்னிடம்
என்னவனாக.







Photo: Venmathi Venmathiye
Nillu
Nee Vaanukkaa
Maegathukkaa Sollu
Venmathi Venmathiye
Nillu
Nee Vaanukkaa
Maegathukkaa Sollu
Vaanamthaam
Unnudaiya Ishtam
Enraal
Maegathukillai Oru
Nashtam
Unnai Indrodu Naan
Marapenae Naan
Marapenae
Unnaalae Nenjil Pootha
Kaathal
Maelum Maelum
Thunbam Thunbam
Vaendaam
Venmathi Venmathiye
Nillu
Nee Vaanukkaa
Maegathukkaa Sollu
Vaanamthaam
Unnudaiya Ishtam
Enraal
Maegathukillai Oru
Nashtam
Unnai Indrodu Naan
Marapenae Naan
Marapenae
Unnaalae Nenjil Pootha
Kaathal
Maelum Maelum
Thunbam Thunbam
Vaendaam
Jannalin Vazhi Vanthu
Vizhunthathu Minnalin Oli
Athil Therinthathu
Azhagu Devathai
Athisaya Mugamae
Aahaahaa
Theenpori Ezha Iru
Vizhigalum Theekuchi
Èna,
Ènnai Uraisidum Kødi
Pøøkalaai Malarnthathu
Manamae
Aval Azhagai Paada Oru
Møzhi Illayae
Alanthu Paarka Pala
Vizhi Illayae
Ènnai Iruntha Pøthum
Aaval Ènnathillaiyae
Maranthupø Èn
Manamae..
Venmathi Venmathiye
Nillu
Nee Vaanukkaa
Maegathukkaa Šøllu
Vaanamthaam
Unnudaiya Ishtam
Ènraal
Maegathukillai Oru
Nashtam
Unnai Inrødu Naan
Marapenae Naan
Marapenae
Unnaalae Nenjil Pøøtha
Kaathal
Maelum Maelum
Thunbam Thunbam
Vaendaam..
Anju Naal Varai Aval
Pøzhinthathu Aasaiyin
Mazhai
Athil Nanainthathu
Nøøru Jenmangal
Ninaivinil Irukkum..
Aathu Pøal..
Èntha Naal Varum Uyir
Urigiya Antha Naal
Šugam Athai
Ninaikkaiyil,
Raththa Naanangal
Raathiri Vedikkum
Oru Nimisham Køøda
Ènnai Piriyavillai,
Vivaram Aaethum Aaval
Aariyavillai
Ènnai Iruntha Pøthum
Aaval Ènnathillaiyae
Maranthupø Èn
Manamae..
Unnai Indrødu Naan
Marapena
நீ யார வேணாலும்
கல்யாணம் பண்ணிக்கோ...
அவன்  கூட வாழ்க்கைய
எப்படி வேணாலும்
சந்தோசமா வாழ்ந்துக்க...
ஆனா.................
நீ மனசில ஒன்னே ஒன்னு மட்டும்
வச்சுக்க,
உன்ன மட்டுமே கடைசி வரைக்கும்
நினச்சுகிட்டே ஒருவன்  இருந்தால்
உன்னை மறக்கவும் முடியாம,
நினைக்கவும் முடியாம கஷ்டப்பட்டால்
ஒரு காலத்துல நாம அவன
காதலிச்சோம் அப்டீனு
உன் வாழ்கையில
எப்பயாவது நினை
ச்சா போதும்...




சிலுவையில் என் காதல் சிறகுகள் --- அரவிந்த்  C
எழுதுகிறேன் உன்னை எண்ணி, 
நான் எழுதும் வரிகள் உனக்காகவும், 
அந்த வரிகளின் வலிகள் எனக்காகவும்... 

உன்னை குறை சொல்லி 
கவிதையெழுத விருப்பமில்லை 
விலகி நிற்கும் போதிலும் 
வாழ்கிறாய் என்னுள்ளே... .


நினைவுகள்

நினைத்து கொள்வதற்கென்று உன் நினைவுகள் இருக்கும் போது
நீ
அருகில் இருந்தால் என்ன தொலைவில் இருந்தால் என்ன...

வாழ்க்கை

வாழ்க்கை
ஒற்றை நாணயத்தின் இரண்டு
பக்கங்கள் நாங்கள் !

அர்த்தமற்றுப் போகும் அவள்
இல்லாத என் வாழ்க்கை !






காதல் கவிதைகள்











உயிருக்குள் உயிரானவளே !
உயிருக்குள் உயிரானவளே 555
என்னவளே...

உன்னைக்கான
ஓடிவந்தேன்...

மைல்கல் பலதாண்டி
ஆவலுடன் ஓடிவந்த எனக்கு...

பரிசளித்தாய் உன்
புன்னகை பூக்களை...

அழகாகவும் உதிர்த்தாய்
உன் புன்னகையை எனக்காக...

மல்லிகை பூக்களை
உன் கூந்தல் சுமந்தபடி...

என்னை கண்டதும்...

மணித்துளிகள்
சில கடந்து...

நாம் விடை பெரும்
நேரம் நெருங்க நெருங்க...

உன் விழிகளில் தேங்கி
நிற்கும் கண்ணீர் துளி...

என்னைவிட்டு பிரிந்து செல்ல
மனமில்லாமல்...

நீ பிரிந்து செல்கிறாய்...

அன்று நீ உதிர்த்த புன்னகை
பூக்கள் மட்டும்...

எனக்கு
உன் நினைவாக...

மீண்டும் நாம் சந்திக்கும்
நாள் வரை...

அந்த புன்னகை மட்டுமே
என் நினைவில்...

ஓயாத அலைகளாக...

உயிருக்குள் உயிரானவளே...

என் உயிரானவளே
காத்திருகிறேனடி....


காத்திருந்தேன்

காத்திருந்தேன்

விடியும்
வரை காத்திருந்தேன்
கனவில் நீ வருவாய்
என்று
ஆனால்,
மறந்து விட்டேன் உறங்க
வேண்டும் என்பதையே
உன் நினைவால் !!!

Wednesday, 8 October 2014

பிரசவம் - மன வலிமை தரும் நம் பாரம்பரியங்கள். . .





பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி...அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள். அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல...விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும்.

மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்...நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்...தைரியமாக இரு!" என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.
...
இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!

இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும். "ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா...இரு நானும் வர்றேன்" என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.

வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்...பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின?!

அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்...இரண்டு, நான்கு, ஆறு...என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்.

ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து.....



10 வயதில் :
நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக...்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?

15 வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது.

18 வயதில் :
பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்ததும் மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னை இறுக அணைத்து ‘என்னை மறந்து விடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன.

21 வயதில் :
நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணத்துடன் கூடிய டேட்டிங் செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந்த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

26 வயதில் :
அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: “நான் உன்னை விரும்புகிறேனென்று நீயும் அறிந்திருப்பாய்”. உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர்.

35 வயதில் :
நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபி போட்டுக்கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளும்போது நான் விழித்திருப்பதை அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் ‘குட் நைட்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும்.

50 வயதில் :
சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்டிருப்பார்.

60 வயதில் :
தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நன்றி...”
என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத் துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்துவிட்டு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லும் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார்.

இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை.