Thursday, 7 March 2019

சாதி இருக்கா இல்லையா?

தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பு ஒழிப்பு னு பேசிட்டு இருக்காங்க. ஆனா 98% சாதி ஒழியவில்லை. ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்ப்பது தன் குழந்தைக்கு தன்னுடைய சாதியில் வரன் பார்த்து திருமணம் முடிக்க வேண்டும் என்பது தான். முதல் காரணம் நம் உறவினர்கள் , ஊர்க்காரங்க தான். ஒரு பையன் /பொண்ணு லவ் பண்ணிட்டு அவங்க வீட்ல முதல் தடவ சொன்னா அவங்க பெத்தவங்க கேட்கிற முதல் கேள்வி அந்த பையன்/பொண்ணு நம்ம சாதியா இல்ல அடுத்த சாதியா ? ஒரே சாதியாக இருந்தால் அடுத்த கேள்வி வசதியான வீடா இல்ல கம்மியான வசதியா? வேற சாதியாக இருந்தால் அந்த முடிவு பெற்றோர்கள் கையில். ஒருசில பெற்றோர்கள் நம்ம சாதியை விட உயர்ந்த சாதி னா ஒத்துக்கிடுவாங்க. நம்மல விட தாழ்ந்த சாதியா இருந்தா கண்டிப்பா ஒத்துக்கிட மாட்டாங்க. முதல்ல சாதிய பார்த்து கல்யாணத்த நிறுத்துனாங்க. இப்பலாம் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதின்னு இவங்களே பிரிச்சிகிட்டாங்க. இப்ப உள்ள காலத்துல இருக்கிற பெரிய காதல் எதிர்ப்பு வேற வேற சாதி இல்ல,உயர்ந்த சாதி , தாழ்ந்த சாதி தான். தன்னை விட உயர்ந்த சாதி பெண்ணா இருந்தா திருமணத்துக்கு சம்மதிப்பாங்களாம் , ஆனால் அந்த உயர்ந்த சாதிக்கு இவங்க தாழ்ந்த சாதி தான. நம்ம ஒருத்தன தாழந்த சாதின்னு சொன்னா நம்மலே ஒருத்தனுக்கு தாழ்ந்த சாதி தான். சாதி வாரியாக பிரிச்சத கூட ஒரு வழியாக ஒத்துக்கிடலாம்,ஆனால் உயர்ந்த சாதி , தாழ்ந்த சாதின்னு சொன்னா ஒத்துக்கிட முடியாது.

கிராமத்துல சாதி மாற்றி கல்யாணம் பண்ணா என்ன ஆகும் னு சொல்றேன். கிராமத்துல சாதி மாற்றி Arrange Marriage நடந்தது கிடையாது. அப்படியே ஒரு பையனும் பொண்ணும் லவ் பண்ணாலும் ஓடி போயிருவாங்க. ஆனால் அந்த பெற்றோர்கள் அந்த ஊர்ல பல தலைமுறையாக வாழ்ந்து இருப்பார்கள். நம்ம பொண்ணு இப்படி பண்ணிட்டான்னு அவங்க அந்த ஊர்ல இருக்க மாட்டாங்க. அது அவங்களுக்கு பெரிய அவமானம். அந்த ஊர் அவங்கள தப்பா பேசும், இந்த விஷயத்துல பெத்தவங்களுக்கு கௌரவம் தான் முக்கியம். 

அதுவே ஒரு பையன் வேற சாதி பொண்ண லவ் பண்ணி ஓடி போயிட்டா அந்த குடும்பம் அந்த ஊர்ல தான் இருக்கும். 

ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் னா ஆண் பண்ணா தப்பில்ல / பெண் பண்ணா தப்பு . இதுதான் இந்த சமூகம். 

பெண்களுக்கு ஒரு அட்வைஸ். வேற சாதி பையன லவ் பண்ணா கண்டிப்பா பெத்தவங்களுக்கு பிடிக்காது. Bcoz உங்க கல்யாணத்த பற்றி பிற உறவினர்களிடம் பேசும் போது அவங்க கேட்கிற முதல் விஷயம் பையன் நம்ம சாதியா? முதலில் வருவது சாதிதான் .  

நீங்க லவ் பண்ற பையன்/பொண்ணு வேற சாதியாக இருந்தாலும் உங்கள் வீட்டில் புரிய வையுங்கள். அந்த பையன்/பெண்ணிடம் உங்கள் காதலை எப்படி பொறுமையாக இருந்து மனதில் நினைத்து வாழ்ந்தீர்களோ அதுபோல் உங்கள் வீட்டிலும் சம்மதம் வாங்குவதற்கு பொறுமையாக இருந்து உங்கள் காதலை பெற்றோர்களுக்கு புரிய வைக்க  வேண்டும். யாருன்னு தெரியாத ஒரு பையன்/பொண்ணு கிட்ட உன்ன பிடிச்சிருக்கின்னு சொன்ன தைரியம் உங்க கூட எப்பவுமே இருந்த பெற்றோரிடம் ஏன் சொல்ல மறுக்கிறீங்க. அவங்க கிட்ட இருந்து சம்மதம் வாங்குறது கஷ்டம் தான். பொறுமையாக இருந்து சம்மதம் வாங்க வேண்டும். குடும்பத்துல சுந்தர பாண்டியன் படத்துல வர மாதிரி சித்தி, அத்தை னு வந்து உங்க மனச மாத்த வருவாங்க. 

நான் அந்த பையன்/பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேன்னு உங்க வீட்ல புரிய வையுங்க. பெத்தவங்களுக்காக, பிடிக்காத வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிட்டு வாழ்றத விட பிடிச்ச ஒருத்தருக்காக wait பண்ணி பார்க்கலாமே? இந்த உலகத்துல பேச்சு வார்த்தை மூலமாக தீர்க்க முடியாதது எதுவுமே இல்லை. வாழ்வது ஒருமுறை அந்த வாழ்க்கை மிக பயனுள்ளதாக இருக்க வேண்டும். நமக்கு பிடித்தவர் கூட வாழ்ந்தால் மட்டுமே இந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு என்று நினைக்கும் அளவிற்கு ஒருவன்/ஒருத்தி இருப்பான். அந்த ஒருவன்/ஒருத்தி கூட உங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுங்கள். 

( For Arrange Marriage )
சாதி இல்ல இல்லன்னு சொல்றவங்களுக்கு ஒரு கேள்வி? நீங்க ஒரு வேலை விஷயமா வெளியூருக்கு போறீங்க. அங்க போற வழியில ஒரு பொண்ண பார்க்கிறீங்க , அந்த பொண்ணு பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாள். இந்த பொண்ண நம்ம பையனுக்கு கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும் னு நினைக்கிறீங்க. அந்த பொண்ணோட முகவரியை கண்டுபிடித்து ஒரு வழியாக அவங்க வீட்டை கண்டுபிடிச்சிட்டீங்க. உங்க காதுக்கு ஒரு செய்தி வருது, அந்த பொண்ணு நம்ம சாதி இல்ல வேற சாதி னு சொல்றாங்க. இப்ப உங்க பையனுக்காக வேற சாதி வீட்டுப்படி ஏறி பொண்ணு கேட்க தைரியம் இருக்கா? அப்படியே தைரியம் இருந்தாலும் ஊரைக் கூட்டி சொந்தம் பந்தம் எல்லோரையும் அழைச்சிட்டு கல்யாணத்த முடிக்க தைரியம் இருக்கா?

Bharath Matrimony ல 98% பேர்  போட்ருக்காங்க. We belong to the XXXXX Caste and looking for a match from the same community.

இப்படிக்கு 
இசக்கி செல்வம் க

No comments:

Post a Comment